டாஸ்மாக்கில் விலை உயர்வு ; ரூ.100க்கு கீழ் எதுவும் இல்லை - குடிமகன்கள் அதிர்ச்சி
டாஸ்மாக்கில் சரக்கு பாட்டில்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.100 கீழ் எந்த சரக்கு பாட்டிலும் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளின் மூலம் ஏராளமான விபத்து ஏற்படுவதால், அந்த கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என பாமக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. எனவே, அந்த கடைகளை மூட வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், அதற்கு அவகாசம் வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்தது. ஆனால், அவகாசம் அளிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது.
எனவே, தமிழகத்தின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள 3 ஏராளமான டாஸ்மாக் கடைகள் சமீபத்தில் மூடப்பட்டன. இதனால் மீதமுள்ள டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது. குடிமகன்கள் நீண்ட வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்கி செல்கின்றனர்.
இதுவரை மொத்தமாக 3321 கடைகள் மூடப்பட்டதால், தமிழக அரசிற்கு தினமும் ரூ.13 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அதை ஈடு செய்யும் வகையில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ரூ.100க்கு கீழே விற்பனை செய்யப்பட்ட மதுபான வகைகள் விலை அதிகரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதாம்.
ஒரு பக்கம் கடைகள் மூடப்பட்டு, மறுபக்கம் சரக்கு பாட்டிலின் விலைகளும் உயர்த்தப்பட்டதால் குடிமகன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.