1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (20:07 IST)

என்னங்க சார் உங்க திட்டம்? ஏன் இப்படி?

வைகை அணையில் நீர் ஆவியாகாமல் தடுக்க கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ எடுத்துள்ள புதுமுயற்சி தோல்வியில் முடிந்தது.


 

 
அணைகளில் உள்ள நீர் ஆவியாகாமல் தடுக்க அமைச்சர் செல்லூர் ராஜூ புது முயற்சியை ஒன்றை மேற்கொண்டார். நீர் நிலைகள் மேல் தெர்மாகோல் அட்டைகள் கொண்டு மூடுவது. இதன்மூலம் நீர் ஆவியாவதை தடுக்கலாம் என்று. ஆனால் அனைத்து தெர்மாகோல் அட்டைகளும் கரை ஒதுங்கியது. இதனால் இவரது முயற்சி தோல்வியில் முடிந்தது.
 
இதுகுறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:-
 
142 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு இந்த கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் அணைகளில் உள்ள நீர் நிலைகள் ஆவியாகாமல் இருக்க புது முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அணைகளில் உள்ள நீர் நிலைகள் மேல் தெர்மாகோல் அட்டைகள் கொண்டு மூடுவது.
 
இதன்மூலம் நீர் ஆவியாவதை தடுக்கலாம். இந்த முயற்சி வெளிநாடுகளில் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்திற்கு ரூ.10 லட்சம் வரை ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் கட்டமாக 200 சதுர அடிக்கு வைகை அணையில் தெர்மாகோல் கொண்டு நீர் நிலை மூடப்பட்டது, என்றார்.
 
ஆனால் சரியான திட்டமும், எவ்வித தொழில்நுட்ப உதவியும் செய்ததால், அனைத்து தெர்மாகோல் அட்டைகளும் சில நிமிடங்களிலே கரை ஒதுங்கியது.