திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 2 அக்டோபர் 2022 (12:12 IST)

பெண்கள் அனைவரும் இலவச பயணத்தை புறக்கணிக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

premalatha
தமிழகத்தில் உள்ள பெண்கள் அனைவரும் இலவச பேருந்து பயணத்தை புறக்கணிக்க வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சமீபத்தில் அமைச்சர் பொன்முடி அவர்கள் பெண்கள் ஓசி பயணம் செய்கிறார்கள் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஆகி உள்ளது. இதற்கு பல பெண்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்
 
இந்த நிலையில் தேமுதிக பொருளாளர் விஜயகாந்த் பேருந்தில் ஓசிப்பயணம் வேண்டாம் என்று ஒட்டுமொத்த தமிழகத்தில் உள்ள பெண்கள் ஓசி பயணத்தை புறக்கணிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்
 
ஓசியில் பயணம் வேண்டாம் என்று அந்த மூதாட்டி சொல்வதுபோல ஒட்டுமொத்த தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள் என்றும் அப்படி புறக்கணித்தால் தான் இந்த ஆட்சியாளர்களுக்கு ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்