1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 1 டிசம்பர் 2023 (12:53 IST)

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்! அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு!

Minister Meiyanathan
சீர்காழி தாலுகா பகுதியில் கடந்த சில தினங்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வந்த நிலையில் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கி பாதிப்புகள் ஏற்பட்டது.


 
அதேபோல நெற்பயிர்களையும் தண்ணீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து சீர்காழி தாலுகா பகுதியில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சர் மெய்யநாதன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

முதலில் தாண்டவன் குளம் பகுதியில் வெள்ள நீர் கடலில் கலக்கும் இடங்களில் தண்ணீர் வடிவது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்

தொடர்ந்து பழையார் சுனாமி குடியிருப்பு பகுதிக்கு சென்ற அவர் குடியிருப்புகளை சுற்றி மழை நீர் தேங்கியுள்ளது குறித்தும், அவ்வாறு தேங்கியுள்ள மழை நீர்  வடிவதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்

இந்த ஆய்வில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, காவல் கண்காணிப்பாளர் மீனா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
 
தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் கூறுகையில்:


மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து  ஆய்வு செய்து வருவதாகவும்,மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் பொதுமக்கள் தங்குவதற்கு  346 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனி கட்டுப்பாட்டு வரை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் மழை வெள்ளத்தால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டும் அவ்வாறு தொடர்பு கொண்டால் உடனுக்குடன் பாதிப்புகள் சரி செய்யப்படும் என தெரிவித்தார்.

Minister Meiyanathan

 
பாதிக்கப்பட்ட சாலைகள் மற்றும் சிறு பாலங்களை கணக்கீடு  செய்யப்பட்டு சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும்

பயிர்கள் பாதிப்புகள் குறித்து கணக்கீடு செய்யப்பட்டு வருவதாகவும் எங்கெல்லாம் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதோ அங்கு கணக்கீடு செய்யப்பட்டு நிவாரணம் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். மேலும்

மழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து 04364222588, 7092255255 உள்ளிட்ட கட்டுப்பாட்டு அறை எண்களை தொடர்பு கொண்டு பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.