1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Pottu Amman is alive in chennai

பொட்டு அம்மான் சென்னையில் வசித்து வருகிறார்: சிங்கள நாளிதழ் தகவலால் பரபரப்பு

Pottu Amman
விடுதலைப் புலிகள் உளவு பிரிவு தலைவர் பொட்டு அம்மான் சென்னைவில் வசித்துவருவதாக இலங்கை நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 


விடுதலைப் புலிகள் அமைப்பின் உளவு பிரிவு தலைவராக இருந்தவர் பொட்டு அம்மான். இவரது உண்மையான பெயர் சண்முகலிங்கம் சிவசங்கர்.  கடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் பிரபாகரன், பொட்டு அம்மான் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர் என்று இலங்கை அரசு அறிவித்தது. இதில் பிரபாகரன் உடலை மீட்ட இலங்கை ராணுவத்தால் பொட்டு அம்மான் உடலை காண இயலவில்லை.  இதனால் பொட்டு அம்மான் பலியானதை இலங்கை அரசால் உறுதிப்படுத்த முடியவில்லை. மேலும் இந்திய அசசு கேட்ட பொட்டு அம்மான் உயிரிழந்ததற்கான சான்றிதழ்களையும் வழங்க முடியாமல் தவித்தது.

இந்நிலையில் பொட்டு அம்மான் உயிரோடு இருப்பதாக கொழும்பில் இருந்து வெளியாகும் சிங்கள நாளிதழில் ஒன்று செய்தி செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், பொட்டு அம்மான் உயிரிழக்கவில்லை. அவர் சென்னையில் மறைந்து வசித்து வருகிறார். குருடீ என்ற பெயரில் அவர் வசித்துவருகிறார். அவருடன் அவரது மனைவி மற்றும் உறவினர்களும் உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. இந்த செய்தி ஈழத்தமிழர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.