1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 26 டிசம்பர் 2017 (14:16 IST)

ரஜினியா? அரசியலுக்கா? கேலி செய்யும் பிரபலங்கள்

டிசம்பர் 31ம் தேதி என்னுடைய அரசியல் நிலைப்பாடு பற்றி அறிவிப்பேன் என்று ரஜினி தெரிவித்துள்ள நிலையில், அதற்குள் போர் முடிந்துவிடும் என நடிகர் எஸ்.வி.சேகர் கேலி செய்துள்ளார்.

 
தமிழகம் முழுவதும் ரஜினி எப்போது அரசியலில் களமிறங்குவார் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ரஜினி தற்போது அவரது ரசிகர்களை சந்தித்து வருகிறார். ரசிகர்களுடான சந்திப்பு இன்று தொடங்கி வரும் 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
 
காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன், ரஜினி தனது அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வரும் 31ஆம் தேதி அறிவிப்பார் என தெரிவித்து இருந்தார். இந்நிலையில் ரசிகர்கள் முன் உரையாற்றிய ரஜினி, தனது அரசியல் நிலைபாடு குறித்து வரும் 31ஆம் தேதி அறிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
 
ரஜினியின் இந்த கருத்துக்கு நடிகர் எஸ்.வி.சேகர், ரஜினி வியூகம் அமைப்பதற்குள் போர் முடிந்துவிடும் என்று கேலியாக கூறியுள்ளார். ராஞ்சில் சம்பத், அரசியலுக்கு வரமாட்டேன் என்று டிசம்பர் 31ஆம் தேதி ரஜினி அறிவிக்கப்போகிறார் என்று கூறியுள்ளார்.