1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 11 அக்டோபர் 2021 (11:40 IST)

பொன்னருக்கு வந்த சோதனை... துப்பட்டியோடு விட்ட போலீஸார்!

அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நள்ளிரவில் காவல் நிலையத்தில் படுத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
 
ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஒருவரை தாக்கியது தொடர்பாக போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என அதிருப்தியடைந்த பொன்.ராதாகிருஷ்ணன், நெல்லை சந்திப்புப் பகுதியில் உள்ள பாரதியார் சிலையின் அடியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 
 
பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நள்ளிரவு வரையிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் போலீஸார் அவர்களைக் கைது செய்து நெல்லை சந்திப்பு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று இரவு முழுவதும் அங்கேயே தங்க வைத்திருந்தனர். 
 
அப்போது காவல் நிலையத்திலேயே வெறும் தரையில் ஒரு போர்வையை மட்டும் வைத்துப் படுத்து உறங்கினார். தற்போது நள்ளிரவில் அவர் காவல் நிலையத்தில் படுத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.