திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 22 பிப்ரவரி 2024 (13:31 IST)

சட்டசபையில் காரசார விவாதம்..! வானதி சீனிவாசன் கேள்விக்கு முதல்வர் பதிலடி..!!

cm vanathi
மதுரை எய்ம்ஸ் போன்று இல்லாமல் கோவையில் நூலகம் அமைக்கப்படும் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனின் கேள்விக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
 
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று காரசார விவாதம் நடைபெற்றது.  இதனிடையே கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்  சட்டப்பேரவையில் கேள்வி ஒன்றை எழுப்பினார்.
 
அதில், கோவையில் நூலகம் அமைப்பதற்கான அறிவிப்புக்கு நன்றி சொல்லி கொள்கிறேன் என்றும் அது உடனடியாக செயலாக்கம் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
 
அதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் போன்று இல்லாமல் கோவையில் நூலகம் அமைக்கப்படும் என்று உறுதி அளித்தார். 2026 ஜனவரி மாதம் கோவையில் கலைஞர் நூலகம் திறக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.


மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் போன்று அல்லாமல் சொன்ன தேதியில்  கலைஞர் நூலகம் கட்டி முடிக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்தார்.