செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 30 நவம்பர் 2019 (14:22 IST)

ரேசன் அரிசியை ரோட்டில் கொட்டிய நபர்! – வைரலான வீடியோவால் வழக்குப்பதிவு!

ரேசன் கடையில் கொடுத்த அரிசி சரியில்லை என சாலையில் கொட்டிய நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

நாகப்பட்டிணம் அருகே பெருமாள் கோவில் தெற்கு வீதியில் உள்ள ரேசன் கடையில் ரமணி என்பவர் அரிசி வாங்கியுள்ளார். வாங்கிய அரிசி தரமற்றதாகவும், குண்டாக இருப்பதாகவும் புகார் தெரிவித்து பணியாளர்களோடு விவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இருதரப்பினருக்கிடையே விவாதம் வளரவே கோபமடைந்த ரமணி தான் வாங்கிய அரிசியை சாலையிலேயே மூட்டையோடு கொட்டியுள்ளார். இதை அந்த பகுதியில் இருந்த சிலர் வீடியோ எடுத்துள்ளனர். அதை சமூக வலைதளங்களில் பதியுமாறு அவரே சொன்னதாகவும் சொல்லப்படுகிறது.

ரமணி அரசு வழங்கும் இலவச அரிசியை சாலையில் கொட்டியது குறித்து ரேசன் கடை பணியாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனால் போலீஸார் ரமணியை தேடி வருகின்றனர்.