அனாதையாக விடப்பட்ட குழந்தைக்கு பாலூட்டி வளர்த்து வந்த போலீசார்!
சென்னை பாரீஸில் பேருந்தில் அனாதையாக விடப்பட்ட 10 மாத குழந்தையை காவல்துறை இரண்டு நாட்களாக பாலூட்டி வளர்த்தி காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.
படப்பையில் இருந்து சென்னை பாரிஸ் பேருந்து நிலையத்திற்கு வந்த அரசு பேருந்து ஒன்றில் 10 மாத குழந்தை ஒன்று கதறி அழுது கொண்டிருந்தது. பேருந்தில் உள்ள அனைவரும் இறங்கி போன பின்னர் குழந்தை மட்டும் அனாதையாக விடுப்பட்டு அழுது கொண்டிருந்தது.
இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த எஸ்பிளனேடு காவல்துறையினர் குழந்தையை மீட்டனர். காவலர்கள் அந்த குழந்தைக்கு பாலூட்டி இரண்டு நாட்களாக கவனித்து வந்தனர். குழந்தைக்கு உரிமை கோரி இரண்டு நாட்களாக யாரும் வராததால் குழந்தையை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.