1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : சனி, 17 ஜூன் 2023 (02:59 IST)

மணல் கொள்ளையை தடுக்க முயன்ற தலைமை காவலர் டிராக்டர் ஏற்றி கொலை: அதிர்ச்சி சம்பவம்..!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள கலபுரகி அருகே தலைமை காவலர் மயூர் டிராக்டர் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கர்நாடகா மாநிலத்தில் உள்ள கலபுரகி அருகே உள்ள நாராயணபுரா என்றா பகுதியில் நடைபெற்ற மணல் கொள்ளையை தடுக்க முயன்ற போது இந்த விபரீதம்  ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
நாராயணபுரா பீமா நதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய மர்ம கும்பல் குறித்த ரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற தலைமை காவலர் மணல் கொள்ளையை தடுக்க முயற்சி செய்தார். அப்போது ஆத்திரம் அடைந்த மணல் கொள்ளை கும்பல், டிராக்டர் ஏற்றி காவலரை கொலை செய்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை மர்ம கும்பலை தேடி வருகிறது.
 
Edited by Mahendran