மாணவிக்கு நீதிக்கேட்டு மெரினாவில் போராட்டம்..?? – உஷாரான காவல்துறை!
கள்ளக்குறிச்சி மாணவி இறப்புக்கு நீதி கேட்டு மெரினாவில் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் படித்த 12ம் வகுப்பு மாணவி பள்ளி விடுதியில் தங்கியிருந்த நிலையில் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மக்கள் அப்பகுதியில் போராட்டம் நடத்தி வரும் நிலையில் நேற்று முன்தினம் கலவரம் வெடித்தது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு சிலர் சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த திட்டமிடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மெரீனாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வாட்ஸப் ஃபார்வேர்டு செய்த 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளன.