திங்கள், 7 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 2 ஜூலை 2016 (17:28 IST)

பேருந்தை கடத்தியது யார்? - கைரேகையை வைத்து விசாரணை

ராஜபாளையம் சரக போக்குவரத்துக்கழக பனிமனையில் இருந்து பேருந்தை கடத்தியது யார் என்பதை கைரேகையை வைத்து விசாரணை நடந்துவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
 

 
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சரக போக்குவரத்துக்கழக பணிமனைக்கு சொந்தமான அரசு பேருந்து மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
 
இந்நிலையில் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டம், திருமாஞ்சோலையில் ரோட்டு ஓரத்தில் மாயமான அந்த பஸ் நிறுத்தப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 
பின்னர் அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தினர். பஸ்சை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து பல்வேறு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. ஸ்டீரியங்கில் பதிவான கைரேகைகளும் பரிசோதிக்கப்பட்டது.
 
மேலும் மதுரை-தொண்டி சாலையில் பூவந்தி சோதனை சாவடியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் கடத்தப்பட்ட பஸ் ஓட்டி செல்லப்பட்டது பதிவாகியுள்ளது.
 
பேருந்தை ஓட்டி சென்ற மர்ம நபர் குறித்து கேமராவில் பதிவான காட்சியை வைத்தும் கைரேகை நிபுணர்களை வைத்தும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என்றும் இன்னும் ஓரிரு நாளில் குற்றவாளி கைது செய்யப்படுவார் என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.