1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 7 அக்டோபர் 2024 (11:46 IST)

சர்வர் வேலைக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த இந்தியர்கள்.. நிலை மாறிய கனடா..!

கனடாவில் சர்வர் மற்றும் வெயிட்டர் வேலைக்காக நீண்ட வரிசையில் இந்தியர்கள் காத்திருந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. 
 
கனடாவில் மிகப்பெரிய வேலைக்கு செல்லும் கனவுடன் செல்லும் இந்தியர்கள் அங்கு வேலை கிடைக்காமல் சிரமப்படுவதாகவும், இதனை அடுத்து பெரும்பாலான இந்தியர்கள் உணவு விடுதியில் வெயிட்டர் மற்றும் சர்வர் வேலைக்கு செல்ல ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
 
கனடாவில் உள்ள பிரபல உணவு விடுதி வெயிட்டர் வேலைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரம் வெளியிட்டதை அடுத்து 3000க்கும் அதிகமான இளைஞர்கள் அந்த உணவு விடுதி முன் குவிந்ததாகவும், இதில் பெரும்பாலான இந்திய இளைஞர்கள் என்றும் கூறப்படுகிறது. 
 
கனடாவில் கடந்த சில ஆண்டுகளாகவே வேலையின்மை தீவிரமடைந்து வருகிறது என்பதும், கனடா செல்லும் இந்தியர்கள் இதனால் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
ஒரு சிலர் கல்லூரியில் படிக்கும் போதே பகுதி நேரமாக வேலைக்கு செல்ல விரும்புகிறார்கள், ஆனால் பெரும்பாலான கனடா செல்லும் இளைஞர்கள் வேலையின்மை பிரச்சனையால் அவதிப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
 
 
Edited by Siva