ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: சனி, 15 அக்டோபர் 2016 (10:59 IST)

ஜெ.வின் உடல் நிலை குறித்து வதந்தி ; 7 பேர் கைது : தொடரும் வேட்டை

ஜெ.வின் உடல் நிலை குறித்து வதந்தி ; 7 பேர் கைது : தொடரும் வேட்டை

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து தவறான வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


 

 
கடந்த மாதம் 22ம் தேதி முதல்வர் சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், அவரது உடல் நிலை குறித்து ஏராளமான வதந்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. முக்கியமக, சமூக வலைத்தளங்களில் ஏராளமான வதந்திகள் பரவி வருகிறது. அப்படி வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல் துறை எச்சரித்துள்ளது. 
 
மேலும், இதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக மத்திய குற்றப்பிரிவினர் மற்றும் சைபர் கிரைம் போலீசார் ஆகியோர் இதை கண்காணித்து வருகின்றனர்.  ஏற்கனவே, 2 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். 42 பேர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
 
அதன்பின், நாமக்கல்லை சேர்ந்த சாப்ட்வேட் இன்ஜினியர் சதீஷ், மதுரையை சேர்ந்த மாடசாமி ஆகியோரை கடந்த 10 தேதி போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், தூத்துக்குடியை சேர்ந்த தனியார் வங்கி  ஊழியர் திருமணி செல்வம், ஆண்டனி சேசுராஜ் மற்றும் சென்னையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவன ஊழியர் பாலசுந்தரம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
 
மொத்தமாக இதுவரை 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வதந்தி பரப்புவோருக்கு 7 வருட சிறைத்தண்டனை அளிக்க முடியும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். இதனால் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.