புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 4 மே 2021 (15:32 IST)

அம்மா உணவகத்தை தாக்கிய விவகாரம்; இருவர் கைது! ஒருவர் தலைமறைவு!

சென்னையில் அம்மா உணவகத்தை தாக்கிய விவகாரத்தில் இருவரை போலீஸ் கைது செய்துள்ள நிலையில் ஒருவர் தலைமறைவாகியுள்ளார்.

சென்னை ஜே ஜே நகரில் உள்ள அம்மா உணவகத்தில் இன்று காலை மூவர் அங்கிருந்த பேனர்களை கிழித்ததுடன், அம்மா உணவகத்தில் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என தகராறு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் ரகளை செய்தவர்களை கட்சியிலிருந்து நீக்கவும், உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்நிலையில் அம்மா உணவகத்தில் சேதப்படுத்தப்பட்ட பேனர் மீண்டும் வைக்கப்பட்டதுடன், ரகளை செய்த மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி நவசுந்தர், சுரேந்திரன் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றுமொரு நபர் தலைமறைவாகியுள்ளார். தலைமறைவான நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.