செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By

ஜெயங்கொண்டம் தொகுதியில் இரண்டாக பிரியும் பாமக வாக்குகள்!

ஜெயங்கொண்டம் தொகுதியில் சீட் கிடைக்காத அதிருப்தியில் வன்னியர் சங்க பொறுப்பில் இருந்து விலகிய வைத்தி இப்போது குருவின் மனைவிக்கு ஆதரவு அளித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் இருக்கும் பாமக 23 சீட்டுகளைப் பெற்று அதற்கான வேட்பாளர் மற்றும் தொகுதிப் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. அதில் ஜெயங்கொண்டம் தொகுதியில் கே பாலு என்பவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே தொகுதிக்கு மாநில வன்னியர் சங்க செயலாளர் க வைத்தியும் விருப்பமனு தாக்கல் செய்திருந்தார்.

அவருக்கு சீட் கிடைக்காத விரக்தியில் இப்போது அவர் பாமகவின் அடிப்படை உறுப்பினர் மற்றும் மாநில வன்னியர் சங்க செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார். இந்நிலையில் அவர் இப்போது முன்னாள் வன்னியர் சங்கத் தலைவர் ஜெ குருவின் மனைவி (சுயேட்சையாக நிற்க உள்ளார்) அவருக்கு தனது ஆதரவை அளித்துள்ளார். இதனால் பாமக வாக்குகள் இரண்டாக பிரிய உள்ளன. இது திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தலாம் என சொல்லப்படுகிறது.