செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : ஞாயிறு, 21 பிப்ரவரி 2016 (23:26 IST)

பாமக வண்டலூர் மாநாடு: வாருங்கள் பாட்டாளிகளே... அன்புமணி உருக்கம்

பாமக வண்டலூர் மாநாடு: வாருங்கள் பாட்டாளிகளே... அன்புமணி உருக்கம்

பாமக வண்டலூர் மாநாடு வெற்றி பெற அனவைரும் வாருங்கள் பாட்டாளிகளே என அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

 
இது குறித்து, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாதாவது:-
 
இன்னும் 7 நாட்களில், அதாவது வரும் சனிக்கிழமை (பிப்வரி 27) அன்று, சென்னை அருகே உள்ள வண்டலூரில் நாமெல்லாம் சங்கமிக்கவுள்ளோம். இதை நினைக்கும் பொழுது மிகவும் உற்சாகமாகவும் எதிர்ப்பார்ப்போடு கூடிய மகிழ்ச்சியாகவும் உள்ளது.
 
அன்றைய தினம் வழிமேல் விழிவைத்து உங்களைக்காண ஆவலுடன் காத்திருப்பேன். மாநாட்டு நிகழ்ச்சிகளை உங்கள் கண் எதிரே தெளிவாகக்காட்ட மாநாட்டுக் குழுவினர் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
 
மாநாட்டில் பங்கு பெற ஏற்கனவே அனைத்து 32 மாவட்டங்களில் இருக்கும் நீங்களெல்லாம் திட்டமிட்டிருப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். ஏனென்றால் கடந்த 14 ஆம் தேதியே இதற்கான முயற்சிகளைத் தொடங்கிவிட்டோம்.
 
எனவே, வழக்கமான மாநாடு என்று இந்த வண்டலூர் மாநாடு அமையாமல் மாபெரும் மாநில மாநாடாக அமையவுள்ளது. நம் முழு பலத்தையும் தமிழ் நாடே காணவேண்டும் என்று நான் விரும்புகிறேன். மக்கள் காவலர் மருத்துவர் அய்யா அவர்களும் பேராவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
 
கிருஷ்ணர் மகா விஷ்ணுவாக விஷ்வரூபக் காட்சியளித்து மகாபாரதப் போரில் எப்படி கீதா உபதேசம் செய்தார் என்று சொல்லப்படுகிறதோ அதைப்போல அந்த அளவுக்கு நாமும் நம் விஷ்வரூபமான பொதுமக்கள் ஆதரவைக் காட்சியாக்கி தமிழ்நாடே காண வைக்கவேண்டும்.
 
தமிழக மக்களுக்கான உண்மையான மக்களாட்சியின் மாண்பை உணர்த்தி தர்மத்தை நிலைநாட்டி தமிழ்நாட்டை அழிவிலிருந்து மீட்டெடுக்கும் மகத்தான மாற்றத்தை உருவாக்க வேண்டும். அதற்கான மக்கள் பிரகடனத்தை அன்றைக்கு அறிவிக்கும் நிலையை உருவாக்குவோம் என தெரிவித்துள்ளார்.