1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By

மட்டன்,சிக்கன், மீன்: முதல்வர் துணை முதல்வருக்கு பாமகவின் தடபுடல் விருந்து

அதிமுக கூட்டணியில் பாமக சமீபத்தில் இணைந்து ஏழு மக்களவை தொகுதிகளையும் ஒரு மாநிலங்களவை தொகுதியையும் பெற்ற நிலையில் இன்று கூட்டணி கட்சிகளுக்கு தைலாபுரத்தில் தடபுடல் விருந்து வைக்கின்றது
 
இந்த விருந்தில் கலந்து கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் அமைச்சர்கள், அதிமுக எம்.எல்.ஏக்கள் தைலாபுரம் வந்தனர். ராம்தாஸ் வீட்டில் நடைபெறும் இந்த விருந்தில் சிறப்பு உணவுகள் தயாராக உள்ளது, குறிப்பாக  மீன், நண்டு, ஆட்டுக்கறி, கோழிக்கறி உள்ளிட்ட உணவுகள் அதிக அளவில் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், ஒருசிலருக்காக உயர் ரக சைவ உணவும் இருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளது
 
இந்த விருந்தில் அனைத்து உணவுகளும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ராமதாஸே உடன் நின்று சமையல் கலைஞர்களை வேலை வாங்கினாராம். அதிமுகவினர்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை எந்த அளவுக்கு பாமகவினர் தாக்கி பேசினார்களோ, அதற்கு நேரெதிராக தற்போது தடபுடல் விருந்து வைத்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. ஆனால் இந்த கூட்டணி தேர்தல் முடிவுகள் வெளிவந்த மறுநாள் இருக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்