1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 27 டிசம்பர் 2022 (16:37 IST)

அதிமுக கூட்டணியில் பாமக? பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாக தகவல்!

ramdoss
அதிமுக திமுக என மாறி மாறி கூட்டணி பயணம் செய்து கொண்டிருக்கும் பாமக வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த பாமகவுக்கு பெரும் ஏமாற்றமே கிடைத்தது. இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
 
ஆனால் திமுக அணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருப்பதால் அந்த கூட்டணியில் இணைவது சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற பாமக திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் தொகுதி உடன்பாடு குறித்து தான் தற்போது நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 
அதிமுக கூட்டணியில் பாமக, தமாகா, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva