1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 5 மார்ச் 2024 (07:47 IST)

`நான் தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம், சிலருக்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறது: திமுக குறித்து மோடி

modi
நான் தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் சிலருக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது என்று பிரதமர் மோடி நேற்று நடந்த கூட்டத்தில் திமுகவை மறைமுகமாக தாக்கி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று சென்னையில் நடந்த பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிய போது இந்தியாவை உலகின் முதல் மூன்று வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஒன்றாக கொண்டு வருவேன். அதற்கு தமிழ்நாட்டின் பங்கு மிகப் பெரியது. சென்னையில் நகர்புற கட்டமைப்புக்கான பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி, மெட்ரோ திட்டம், விமான நிலையம் என அடுத்தடுத்து திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு நாங்கள் கொண்டு வந்துள்ளோம்

சென்னையில் புயல் வெள்ளம் வந்தபோது மக்களுக்கு திமுக அரசு உதவி செய்யவில்லை. தமிழ்நாட்டில் சிறு குறு நடுத்தர தொழில் மேலாண்மைக்காக ஆயிரக்கணக்கான கோடிகளை வழங்கியது பாஜக அரசுதான். மத்திய அரசு தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு கடுமையாக உழைத்து வரும் நிலையில் திமுக அரசு அதற்கு முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது

குடும்ப அரசியல் செய்துவரும் கட்சிகள் நான் ஒவ்வொரு முறை தமிழ்நாட்டுக்கு வரும்பொழுதும் அவர்களது வயிற்றில் புளியை கரைத்தது போல் இருப்பதாக நான் உணர்கிறேன்

தமிழ்நாட்டில் போதை பொருள் தங்கு தடை இன்றி கிடைப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி எனது மனதை வருத்தம் அடைகிறது. போதைப் பொருளை ஒழிப்பதற்கான தீவிர முயற்சியை பாஜக அரசு எடுக்கும்’ என்று கூறினார்

Edited by Siva