புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (20:05 IST)

தமிழகத்திற்கு பிரச்சாரத்திற்கு வரும் பிரதமர் மோடி, அமித்ஷா! – சூடுபிடிக்கும் தேர்தல் களம்!

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தேர்தல் பிரச்சாரத்திற்கு பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள், தேசிய கட்சிகள் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. பெரிய கட்சிகளிடையே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படாத நிலையில் கட்சிகள் தனித்தனியே தேர்தல் பிரச்சாரம், மாநாடு போன்றவற்றை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா தமிழகம் வருவதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். அதன்படி பிரதமர் மோடி கோயம்புத்தூரில் பிப்ரவரி 25ம் தேதியும், உள்துறை அமைச்சர் அமித்ஷா விழுப்புரத்தில் பிப்ரவரி 27ம் தேதியும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர். அதை தொடர்ந்து விரைவில் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கப்படலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.