திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 21 ஜூலை 2023 (17:49 IST)

+2 துணைத்தேர்வு மதிப்பெண் பட்டியல் எப்போது? அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு..!

12ஆம் வகுப்பு பொது தேர்வுல் தேர்ச்சி அடையாத 47,934 மாணவர்கள் துணைத் தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்று இந்த ஆண்டு கல்லூரிகளில் சேரலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 
 
இதன்படி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் 19ஆம் தேதி துணை தேர்வு நடைபெற்றது. 
 
இந்த நிலையில்  ஜூலை 24ஆம் தேதி முதல் +2துணைத் தேர்வு மதிப்பெண் பட்டியலை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 
www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து மதிப்பெண் பட்டியலை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்றும் விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில்  தேர்வு உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரில் பதிவு செய்யலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran