1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வியாழன், 22 ஜூன் 2023 (10:54 IST)

பிளஸ் 1 மாணவி கர்ப்பம்.. கல்லூரி மாணவர் தான் காரணமா?

கடலூரில் பிளஸ் 1 மாணவி கர்ப்பம் ஆகியுள்ள நிலையில் அவரது கர்ப்பத்திற்கு கல்லூரி மாணவர் ஒருவர்தான் காரணம் என போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
கடலூர் பகுதியை சேர்ந்த 16 வயது பிளஸ் 1 மாணவி ஒருவருக்கும் 19 வயது கல்லூரி மாணவர் ஒருவருக்கும் பழக்கம் இருந்ததாகவும் இந்த பழக்கம் காதிலாக மாறி இருவரும் உல்லாசம் அனுபவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் தற்போது பிளஸ்-1 மாணவி ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தது குறித்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். 
 
அப்போது 18 வயது நிரம்பாத சிறுமி கர்ப்பமாக இருப்பதை டாக்டர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து பிளஸ் 1 மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் கல்லூரி மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran