ஞாயிறு, 23 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 13 செப்டம்பர் 2016 (01:40 IST)

காவிரி நீர் விவகாரம்: சென்னை நட்சத்திர விடுதியில் ‘பெட்ரோல் குண்டு’ வீச்சு

காவிரி நதிநீர் பிரச்சினையை ஒட்டி சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி மீது அதிகாலையில் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
 

 
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான விவகாரத்தில் இரு மாநிலத்திலும் வன்முறை காட்சிகள் அரங்கேறி வரும் நிலையில் நிலைமை நிலைமை மோசமடைந்து வருகிறது.
 
இந்நிலையில் திங்களன்று அதிகாலை, மயிலாப்பூரில் உள்ள நட்சத்திர விடுதிக்க வந்த மர்ம நபர்கள் சிலர் கண்ணாடிகளை அடித்து உடைத்ததோடு, பெட்ரோல் குண்டுகளையும் வீசி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
 
ஆனால், தாக்குதலின்போது விடுதி ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. காவிரி நீரைத் திறந்துவிட்டதில் கர்நாடகாவின் போக்குக்கு எதிரான போராட்டமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.