செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 24 அக்டோபர் 2021 (08:05 IST)

பெட்ரோலுக்கு இணையாக உயர்ந்து வரும் டீசல் விலை: இன்றைய விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருகிறது என்பதையும் பெட்ரோல் விலை 105 ரூபாயை நெருங்கி விட்டது என்பதையும் டீசல் விலை 100 ரூபாயை தாண்டி விட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தினந்தோறும் 30 காசுகளுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை போட்டி போட்டுக் கொண்டு உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் விலை 30 காசுகள் உயர்ந்து உள்ளது என்றும் டீசல் விலை 34 காசுகள் உயர்ந்து உள்ளது என்றும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.104.52 என்ற நிலையிலும் டீசல் விலை 100.59 ரூபாய் என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் பெட்ரோல் விலைக்கு இணையாக 100 ரூபாயை தாண்டியும் டீசல் விலை மேலும் உயர்ந்து கொண்டே இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர்.