புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (06:51 IST)

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா? இன்றைய விலை

கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து கொண்டே வருவதை அடுத்து இந்தியாவிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்தது
 
நேற்று பெட்ரோல் விலை 18 காசுகளும் டீசல் விலை 19 காசுகளும் குறைந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையில் இன்று சென்னையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சென்னையில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூபாய் 99.32 என்ற நிலைக்கும் டீசல் விலை ஒரு லிட்டர் ரூபாய் 93.66 என்ற விலையிலும் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் விலை ஏறாமல் இருந்தது பொதுமக்களுக்கு சற்று நிம்மதியை தந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சர்வதேச சந்தை விடுமுறை என்ற காரணத்தினால் நேற்றைய விலையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது