செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (09:39 IST)

தனிமையில் உல்லாசம் செய்த ஊராட்சி தலைவர் – பெண் வி.ஏ.ஓ! – சுற்றி வளைத்த மக்கள்!

சிவகங்கை அருகே ஊராட்சி தலைவருடன் உல்லாசமாய் இருந்த பெண் வி.ஏ.ஓ-வை பொதுமக்கள் வீட்டிற்குள் சிறை வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் சொக்கநாதன்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் வித்யா. அந்த பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரியும் இவருக்கு திருமணம் ஆகி சில வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் அந்த கிராமத்தின் ஊராட்சி தலைவர் கண்ணனுக்கும், வித்யாவுக்கும் ரகசிய தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த விசயம் கிராம மக்களுக்கும் தெரிந்திருந்தாலும் அமைதி காத்து வந்துள்ளனர். இந்நிலையில் கண்ணன் வீட்டிற்கு சென்ற வித்யா அவருடன் தனிமையில் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்து கண்ணன் வீட்டிற்கு விரைந்த வித்யாவின் கணவர் மற்றும் பொதுமக்கள் வீட்டை பூட்டி இருவரையும் உள்ளேயே சிறை பிடித்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அங்குள்ள மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ள போலீசார் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்து அவர்கள் இருவரையும் வெளியே மீட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.