ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 3 ஜூலை 2017 (16:33 IST)

ஜி.எஸ்.டி எதிரொலி ; குடிநீர் கேன் விலை ரூ.45 ஆக உயர்வு : பொதுமக்கள் அதிர்ச்சி

மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜி.எஸ்.டி காரணமாக மக்கள் பயன்படுத்தும் குடிநீர் கேனின் விலை ரூ.10 அதிகரித்துள்ளது.


 

 
சென்னையை சுற்றிய ஏரிகள் பெரும்பாலும் வறண்டு விட்டதால்,  மாநகராட்சி மூலம் அளிக்கப்படும் குடிநீரின் அளவு வெகுவாக குறைந்து விட்டது. இதனைத் தொடர்ந்து சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் குடிநீர் கேனை வைத்து பொதுமக்கள் தண்ணீர் பிரச்சனையை சமாளித்து வருகிறார்கள்.
 
இந்நிலையில், ஜி.எஸ்.டி படி தண்ணீர் கேன்களுக்கு 18 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. எனவே, ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்ட குடிநீர் கேன்கள் ரூ.30 அல்லது ரூ.35க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. அதேபோல்  ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கேன்கள் இனி ரூ.40 மற்றும் ரூ.45க்கு விற்பனை செய்யப்பட உள்ளன.
 
ஏற்கனவே தண்ணீர் பிரச்சனையில் சிக்கியுள்ள சென்னை வாசிகள், இந்த விலை உயர்வால் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இது அவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.