வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 17 ஜனவரி 2017 (16:19 IST)

அலங்காநல்லூரில் போர்களம்: இளைஞர்கள் கைது; மக்கள் கண்டன பேரணி!

ஜல்லிக்கட்டுக்காக 21 மணிநேரம் போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்களை உடனே விடுதலை செய்ய கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


 
 
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பீட்டா அமைப்பினர் தொடர்ந்த இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் இந்த முறையும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தடை தொடர்ந்து நீடித்து வருகிறது.
 
இதனிடையே, அலங்காநல்லூரில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், தடையை மீறி போட்டிகளை நடத்த விடாமல் தடுக்கும் பொருட்டு அங்கு ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். 
 
நேற்று காலை முதல் இன்று காலை 6 மணிவரை 21 மணி நேர போராட்டம் நீடித்தது. ஆனால் போலீசார் தொடர்ந்து போராட்டத்துக்கு அனுமதி தராமல் அனைவரையும் வலுக்கட்டாயமாக இளைஞர்களை கைது செய்தனர். 
 
இந்நிலையில் திடீரென அலங்காநல்லூர், வாடிப்பட்டி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் குதித்துள்ளனர். தங்களுக்காக போராடியவர் இளைஞர்கள், மாணவர்கள், பெண்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.