1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Modified: செவ்வாய், 17 டிசம்பர் 2019 (14:09 IST)

மக்களே....ஹெல்மெட் வாங்கினால் வெங்காயம் இலவசம்...

பருவம் தவறி மழை பெய்துள்ளதால், வெங்காயம் உற்பத்தியாகும் மாஹாராஷ்டிர, ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் வெங்காயம் விலை  கடுமையாக உயர்ந்துள்ளது .இந்நிலையில் சென்னை  கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ வெங்காயம் ரூ. 100 முதல் ரூ. 180 வரை விற்பனை ஆகிறது.
அதனால் ஏழை எளிய மக்கள் வெங்காயத்தைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்த மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் பரவலாகி வருகிறது.
 
இந்நிலையில், அனைத்து மக்களுக்கும் வெங்காயம் கிடைட்க்க வேண்டும் என்பதற்க்காக அரசும் எகிப்தில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்துள்ளது. 
 
சில நாட்களுக்கு முன், ஒரு பெண் தனது காதில் வெங்காயத்தை கம்மலாக அணிந்ததும், ஒரு திருமண நிகழ்ச்சியில் மணமகன் -மணமகளுக்குப் பரிசாக பெரிய வெங்காயம் பரிசளித்ததும், செல்போன் கடையில் செல்போன் வாங்கினால் வெங்காயம் இலவசம் என்பது போன்ற நிகழ்வுகள்  வைரல் ஆனது.
 
இந்நிலையில் ஹெல்மெட் வாங்கினால்  வெங்காயம் இலவசம் என்று சேலத்தில் உள்ள கடையில் வழங்கப்படுகிறது.
 
சேலம் மாவட்டம் கோட்டை பகுதியில், ஜம் ஜம் என்ற பெயரில் ஒரு கடையில் ஹெல்மெட் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு ஒரு ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என வழங்குகின்றனர். ஒரு ஹெல்மெட் ரு. 380 ல் இருந்து துவங்குகிறது. இது மக்களைக் கவர்ந்துள்ளது.
 
சேலத்தில் ஒரு கிலோ வெங்காயம் ரூ. 80 ல் இருந்து துவங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.