புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (11:40 IST)

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்: ஏகனாபுரம் மக்கள் மீது வழக்குப்பதிவு..!

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போராடிவரும் ஏகனாபுரம் மக்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சென்னையில் இரண்டாவது விமான நிலையம் பரந்தூரில் அமைக்காத திட்டமிடப்பட்டு அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியும் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது என்பது தெரிந்ததே. சமீபத்தில் விமான நிலையத்திற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தப்பட்டதாக தமிழ்நாடு அரசு அரசாணையில் செய்தி வெளியிட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் பரந்தூரில் விளைநிலங்களில் விமான நிலையம் அமைக்க கூடாது என்று கோரிக்கை விடுத்து அந்த பகுதி மக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர். குறிப்பாக ஏகனாபுரம் மக்கள் கடந்த 765 நாட்களாக போராடிவரும் நிலையில் போராட்டம் செய்த கிராம மக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் ஏகனாபுரம் கிராம மக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் ஏகனாபுரத்தில் நில எடுப்பு அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட்டதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று சாலை மறியல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran