ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 28 ஆகஸ்ட் 2024 (07:50 IST)

பரந்தூர் விமான நிலையம்.. போராட்டத்தை மீறி கையகப்படுத்தப்பட்ட நிலம்: தமிழக அரசு அறிவிப்பு..!

மறந்து ஒரு விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஒரு பக்கம் வருட கணக்கில் பொதுமக்கள் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் விமான நிலையத்திற்கு தேவையான நிலம் கையகப்படுத்தப்பட்டு விட்டதாக தமிழக அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க, ஏகனாபுரம் கிராமத்தில் நிலம் எடுப்பு தொடர்பாக அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. நில எடுப்பு அறிவிப்பு நாளிதழில் வந்திருப்பதை அறிந்து  ஏகானபுரம் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை மேற்கொண்டு வரும் ஏகனாபுரம் மக்கள், நிலங்களை பார்வையிடுவதற்கும் அளவீடு செய்வதற்கும் அரசு அதிகாரிகளையும் அனுமதிக்காமல் இருந்தனர். ஆனால் தொடர் போராட்டங்கள் நடந்தாலும் தற்போது ஏகனாபுரத்தில் நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் இன்னும் அந்த பகுதி மக்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவார்களா? அல்லது தமிழ்நாடு அரசின் முடிவுக்கு கட்டுப்பட்டு நிலத்தை வழங்க சம்மதிப்பார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Siva