பல்லாவரம் வாரச்சந்தை 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறப்பு
சென்னை பல்லாவரம் வெள்ளிக்கிழமை வாரச் சந்தை 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக செயல்படாத சென்னை பல்லாவரம் வெள்ளிக்கிழமை வாரச் சந்தை 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஆம், போலீஸ் அனுமதி அளித்த நிலையில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் பல்லாவரம் வார சந்தை திறக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் அச்சத்தால் மூடப்பட்டிருந்த சந்தை 7 மாதங்களுக்கு திறக்கப்பட்டதால் அப்பகுதி வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.