வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 16 பிப்ரவரி 2022 (15:26 IST)

திமுக ஆதரவுடன் ராஜ்யசபா எம்பியாகும் ப.சிதம்பரம்?

வரும் ஜூன் மாதத்துடன் காங்கிரஸ் ராஜ்யசபா எம்பி ப சிதம்பரம் பதவி காலம் முடிவடைவதை அடுத்து திமுக ஆதரவுடன் தமிழகத்திலிருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
வரும் ஜூன் மாதத்தில் தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்பி களின் பதவிகள் முடிவுக்கு வருகின்றன. இதனை அடுத்து 4 எம்பிக்கள் திமுக தரப்பில் இருந்தும், 2 எம்பி அதிமுக தரப்பில் இருந்தும் எம்பிஆக வாய்ப்பு உள்ளது
 
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் 18 எம்எல்ஏக்கள் ஆதரவு திமுகவுக்கு தேவை என்பதால் அதனை பயன்படுத்தி தனக்கு ஒரு ராஜ்யசபா எம்பி பதவி வாங்க ப சிதம்பரம் திட்டமிட்டிருப்பதாகவும் இதுகுறித்து திமுக மேலிடம் மற்றும் சோனியா காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது
 
தற்போது பா சிதம்பரம் மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் ப.சிதம்பரம், அடுத்ததாக தமிழகத்திலிருந்து எம்பியாக தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது