செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: சனி, 9 செப்டம்பர் 2017 (06:16 IST)

தமிழக மாணவர்களுக்கு வெளிமாநில பயிற்சியாளர்கள்: செங்கோட்டையன்

தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கையில் இன்னொரு பக்கம் கடந்த பத்து ஆண்டுகளாக பாடத்திட்டத்தை தமிழக அரசு மாற்றாமல் இருப்பதாக உச்சநீதிமன்றம் உள்பட அனைவரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.



 
 
இந்த நிலையில்  வரும் கல்வியாண்டில் தமிழகம் முழுவதும் 412 மையங்களில் வெளிமாநில கல்வியாளர்களைக் கொண்டு தேசிய அளவிலான பாடத்திட்ட பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 
 
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டை அடுத்த பெரியாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி கலந்து கொண்ட செங்கோட்டையை இதனை அறிவித்துள்ளார். தற்போதைய காலத்திற்கு ஏற்றவாறு பாடதிட்டங்களை மாற்றி மாணவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்யும் அவர் உறுதி அளித்துள்ளார்.