அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் அணியினர்!
ஓபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகிகள் இன்று அதிமுகவினர் இணைந்தனர்.
எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ. பன்னீ செல்வத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர். இதையடுத்து, ஓபிஎஸ், தினகரனுடன் இணைந்து அரசியலில் பயணித்து வருகிறார்.
விரைவில் பாராளுமன்ற தேர்தல் வரவுள்ளதை அடுத்து, ஓ. பன்னீர் செல்வம் பாஜகவுக்கு ஆதரவளித்து வருகிறார்.
இந்த நிலையில், ஓபிஎஸ் அணியின் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் ஜி.சரவணன், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் இன்று அதிமுகவினர் இணைந்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், ஓபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் திமுக, மதிமுகவை சேந்த நிர்வாகிகள் உட்பட 300 பேர் அதிமுகவில் இணைந்தனர்.