வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 2 ஜூன் 2019 (10:56 IST)

அதிமுக தொண்டர்களுக்கு அறிவுரை கூறிய ஓபிஎஸ் மகன் !

அண்மையில் நடைபெற்ற பாஜக அமைச்சரவைக் குழுவில் அதிமுக சார்பில் யாரும் இடம்பெறவில்லை. அதிமுக சார்பில் தேனி தொகுதியில் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத்துக்கு நிச்சயம் மத்திய அமைச்சர் பதவிகொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடக்கவில்லை.
இந்நிலையில் இதுகுறித்து தேனி தொகுதி எம்பி ரவீந்தரநாத் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் : தேனி மக்களவைத் தொகுதி  மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், மக்கள் பணி செய்வதைத்தான் ஜெயலலிதா பாடமாகக் கற்றுத்தந்தார் என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும் தேவையற்ற கருத்துக்களை யாரும் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். மக்களுக்கு பணியாற்றுவதே எனது தலையாய கடமை என்று தெரிவித்துள்ளார்.