திமுகவுடன் எடப்பாடி பழனிச்சாமி அரசு ரகசிய கூட்டணியா? ஓபிஎஸ் கேள்வி
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு, மத்திய பாஜகவின் கைப்பாவையாக செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வரும் நிலையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், இந்த அரசு திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி மீது குறை கூறினால் துரைமுருகனுக்கு கோபம் வருவது ஏன் என கேள்வி கேட்டுள்ள ஓபிஎஸ், ரகசிய கூட்டணி இருப்பதால் தான் இந்த கோபம் வருகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.
மேலும் டிடிவி தினகரன் அதிமுகவில் என்ன பதவியில் இருக்கின்றார் என்பதை அனைவரும் தேர்தல் ஆணையத்திடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று கூறினார். சமீபத்தில் தேர்தல் ஆணையம் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று தெரியவில்லை என்று கூறியது. அப்படியிருக்கும் நிலையில் தினகரனின் துணைப்பொதுச்செயலாளர் பதவி இல்லை என்பதே ஓபிஎஸ் அவர்களின் கருத்தாக உள்ளது.