திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் இன்று முறையீடு: ஈபிஎஸ் தரப்பில் கேவியட் மனு!

ops eps
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் முதல் கட்டமாக ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வந்த நிலையில் அதன் பிறகு ஈபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்த நிலையில் அந்த வழக்கில் ஈபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு இருந்தது. 
 
இந்த நிலையில் ஓபிஎஸ் தரப்பு இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இன்று முறையீட்டு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
அதிமுக பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று அறிவித்த இரண்டு நீதிபதிகள் அமர்வு கொண்ட தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் சார்பில் இன்று முறையீடு தாக்கல் செய்யப்பட உள்ளது 
 
இந்த நிலையில் இந்த வழக்கில் எங்களை கேட்காமல் எந்தவித முடிவும் எடுக்கக் கூடாது என ஈபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஒபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் எதிர்காலம் என்ன என்பதை நிர்ணயிக்கும் இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது