பாஜக பிரமுகரின் தாயார் காலில் விழுந்து ஆசி பெற்ற ஓ பன்னீர்செல்வம்!
முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களை பாஜகவின் ஆதரவாளர் என்று பலர் கூறி வரும் நிலையில் பாஜக பிரமுகர் ஒருவரின் தாயாரின் காலில் விழுந்து ஓபிஎஸ் ஆசி பெற்று உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ் வி சேகர் சமீபத்தில் தனது 70வது பிறந்த நாளை கொண்டாடினார். இந்த பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள ஓ பன்னீர்செல்வம் திட்டமிட்டிருந்த நிலையில், அவர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்ததால் கலந்து கொள்ள முடியவில்லை
இந்த நிலையில் இன்று எஸ் வி சேகர் வீட்டுக்கு சென்ற ஓ பன்னீர்செல்வம் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவருடைய தாயாரின் காலில் விழுந்து ஆசி பெற்றார்
அதன் பின்னர் எஸ் வி சேகர் மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் தற்போதைய அரசியல் நிகழ்வு குறித்து பேசிக் கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எஸ் வி சேகர் ஓபிஎஸ் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது