1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வியாழன், 11 மே 2017 (16:18 IST)

ஒபிஎஸுக்கும் ஈபிஎஸுக்கும் வளையல்கள் புடவைகள் பார்சல்

பாகுபலி  படத்தில் வரும் பாட்டில்,  வந்தாய் ஐய்யா  ! வந்தாய் ஐய்யா  ! வாழ்வை மீண்டும் தந்தாய் ஐய்யா ! என்பார்கள் மகிழ்மதியின் மக்கள். போனாய் அம்மா ! போனாய் அம்மா ! வாழ்வை மீண்டும் பறித்தாய் அம்மா! என தமிழகம் பாடுகிறது. கத்தி போய், பொம்மை வந்தது, டும் ! டும் ! டும் ! என்பதை போல ஒபிஎஸ் போய்  ஈபிஎஸ் வந்தார். 


 
 
வந்தார்கள்! அவர்கள் செய்த ஊழலுக்காக மண்டி இட்டார்கள்! மாநிலத்தின் உரிமைகளை டெல்லியின் சீமான்களிடம் அடகு வைத்தார்கள்!  தவறு செய்யும் மத்திய அரசை பற்றி பேச தயங்குகிறார்கள். ஒரு பெண்ணின் முந்தானையில் ஒழிந்து கொண்டிருந்தவர்கள் அவர் இறந்த பின்பு ஆடைகள் அற்றவர்களாய்  நிற்கிறார்கள்.
 
குரங்குகள், மஸ்தானிடம் தலை ஆட்டுவது போல இந்த வருமான வரி துறைக்கும், டெல்லியின் குருமார்களுக்கும், ஆப்  கே  மோடி   சர்காருக்கும்  தலை ஆட்டி வருகிறார்கள். மாநிலம் முழுவதும் வறட்சி, டாஸ்மாக் எதிரான பெண்கள் போராட்டம், பிரம்மிக்க வைக்கும் ஊழல்கள், கொட நாட்டு தொடர் கொலைகள், தற்கொலை என தினம் தினம் சிந்து பாத் கதைகள் தான்.    
 
ஜெயலலிதா இறந்த போதே இந்த அரசு கலைக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் இந்த அடிமைகளை நம்பி, மாநிலத்தில் ஒரு கோமா அரசு நடை பெற்று வருகிறது. பிஜேபியின்  ஜனாதிபதி தேர்தல் கனவு, உயிரோட்டம் இல்லாத இந்த பிண அரசுக்கு நம் மோடி ஜி வெண் சாமரம் வீசி கொண்டிருக்கிறார்.
 
மாண்பு மிகு பிரதமர் அவர்களே ! பாஹுபலி படம் பாருங்கள், அதில் வெட்டவெட்டியது பெண்களை தொட்டவர்களின்  கரங்களை அல்ல !  தலைகளை  ! என்ற வசனம் வரும். அது போல தமிழகம் முழுவதும் ஊழல் கரை படித்து உள்ளது. இங்கு நீங்கள் நடந்த வேண்டியது ரெய்டுகள் அல்ல ! முழுமையான தண்டனைகளை.  


 
 
சசிகலாவும் தினகரனும் சின்ன மீன்களே! பிடிக்க வேண்டிய மீன்கள் நிறைய இருக்கிறது. சசிகலாவுக்கு பெங்களூரு சிறை, தினகரனுக்கு திகார்,  இன்னும் யார் யாருக்கு எந்த எந்த சிறையோ? புழல் சிறை கூட சிலரை இன்னும் சற்று நாட்களில் வரவேற்கும்.
 
நீட் தேர்வு விதி முறை மீறல் பற்றி இதுவரை இந்த வாய் திறக்கவில்லை. காரணம் இவர்கள் இருவர் குடும்பியும் அவர் வசம். ஒருவேளை ஒபிஸும் , ஈபிஸும் தேர்வு எழுத சென்று அவர்களின் முழுக் கை சட்டைகள் கிழிக்கபட்டு இருந்தால் அப்போதும் கூட, வாய் திறக்க மாட்டார்கள். இவர்கள் வீட்டு பெண் பிள்ளைகள் உள்ளா டை கழட்டப்பட்டு இருந்தால் கூட வாய் திறக்க மாட்டார்கள்.
 
காரணம் - சேகர் ரெட்டி டைரி குறிப்புகள்.
 
கேரள முதல்வருக்கு, பயம் இல்லை! அவர் அந்த மாநில மக்களின் மாணவர்களின் உரிமைகள் பற்றி பேசுகிறார். தேர்வு வாரியம் மன்னிப்பு கேட்கிறது. ஆனால் இந்த ஓபிஎஸும் , ஈபிஸும் பேச மாட்டார்கள். மாநில மக்களின், மாணவர்களின் உரிமைகள் பேச நாம் இந்த இருவருக்கும் தர வேண்டிய பரிசுகள்  வளையல்களும் , புடவைகளும்.



இரா .காஜா பந்தா நவாஸ்,
பேராசிரியர்