குன்னூர் - ஊட்டி சாலையில் மண்சரிவு.. போக்குவரத்து நிறுத்தம்.. மலை ரயிலும் நிறுத்தம்..!
கனமழை காரணமாக ஊட்டி - குன்னூர் சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் ஏற்கனவே மண்சரிவு காரணமாக மலை ரயில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது குன்னூர் - ஊட்டி சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் இன்னும் அதிக மண்சரிவு ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுவதால் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை மற்றும் குன்னூர் - ஊட்டி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் விரைவில் சாலை சரி செய்யப்பட்டு போக்குவரத்து அனுமதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே மலை ரயில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளதால் ஊட்டி சென்றவர்கள் வீடு திரும்ப முடியாமல் திண்டாடிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன
Edited by Siva