நியாய விலைக்கடைகளில் வெங்காயம்: அமைச்சர் தகவல்!!
நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தகவல்.
கனமழை காரணமாக வெங்காய சாகுபடி குறைந்துள்ளதால் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களின் காய்கறி சந்தைகளில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.100 க்கும், சின்ன வெங்காயம் கிலோ ரூ.120க்கும் விற்பனையாகி வருகிறது. முன்கூட்டிய நடவடிக்கை எடுத்த மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது.
கடந்த முறை போல வெங்காயம் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது அரசு. அதன்படி இன்று முதல் பண்ணை பசுமை கடைகளில் ரூ.45க்கு ஒரு கிலோ பெரிய வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் நலன்கருதி தமிழக அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ இது குறித்து பேசியதாவது, தமிழகத்தில் ஆண்டிற்கு 6 லட்சம் டன் பெரிய வெங்காயமும் 4 லட்சம் டன் சின்ன வெங்காயம் என 10 லட்சம் டன் வெங்காய தேவை உள்ளது. மேலும் வெங்காயம் விலை மேலும் உயர்ந்தால், நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.