ஞாயிறு, 16 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 16 மார்ச் 2025 (08:25 IST)

ஏற்கனவே ஒரே நாடு, ஒரே தேர்தல் இந்தியாவில் நடந்துள்ளது! - மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால்!

Arjun Ram Meghwal

இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வரும் நிலையில், இதுபோன்ற தேர்தல்கள் ஏற்கனவே இந்தியாவில் நடந்துள்ளதாக மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் தெரிவித்துள்ளார்.

 

ராஜஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் “ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கு தேர்தல் கமிஷன், நிதி ஆயோக் மற்றும் முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்ட குழு என அனைவரும் ஒப்புதல் அளித்துள்ளனர். அதன் பின்னரே மத்திய அமைச்சரவையிலும் இந்த திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

ஒரே நாடு ஒரே தேர்தல் தேசத்தின் நலன் சார்ந்தது. எனவே இதை செயல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இதற்கு முன்னர் 1952, 1957, 1962 மற்றும் 1967ம் ஆண்டுகளில் இந்தியாவில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டுள்ளன” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K