ஓடும் பேருந்தில் ஒருவர் சுட்டுக்கொலை: தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரமா?
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அரசுப்பேருந்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை நாகர்கோவிலில் இருந்து கோவையை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுள்ளது. பேருந்து விருதுநகரை அடுத்த சாத்தூரில் அரசுப் பேருந்தில் அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கியால் சுட்டனர்.
இந்த துப்பாக்கி சூட்டில் கோயில்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் உயிரிழந்தார். பின்னர், ஓட்டுநரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி பேருந்தை நிறுத்த சொல்லி அங்கிருந்து அவர்கள் தப்பிச் சென்றனர்.
துப்பாக்கியால் சுட்ட இருவரும் தலைமறைவாகி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், தமிழகத்திலும் துப்பாக்கிக் கலாச்சாரம் உறுவெடுத்து வருகிறதோ என்ற ஐயம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.