செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 5 ஜனவரி 2024 (12:50 IST)

பள்ளிகளுக்கு விடுமுறையை ஈடுசெய்ய வேலை நாட்கள் அறிவிப்பு

சென்னை உள்ளிட்ட 4மாவட்டங்களில் வரலாறு காணாத மழை மற்றும் மிக்ஜாம் புயலால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதால் அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 4 வாரங்களுக்கு சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் வேலை நாள் என்று சென்னை மாவட்ட முதன்மை அலுவலர் அறிவித்துள்ளார்.

சமீபத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்ய வேலை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

4 வாரங்களுக்கு சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் வேலை நாள் என்று சென்னை மாவட்ட முதன்மை அலுவலர் அறிவித்துள்ளார்.

ஜனவரி மாதத்தில் 2 சனிக்கிழமைகள், பிப்ரவரியில் 2 சனிக்கிழமைகள் பள்ளி வேலை நாள் என்றும், ஜனவரி 6,  மற்றும் 20 ஆகிய தேதிகளிலு, பிப்ரவரி 3, 17 ஆகிய   4 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.