திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 23 பிப்ரவரி 2018 (19:00 IST)

ஆதார் அட்டை மட்டுமல்ல, குழந்தைகளை பள்ளியில் சேர்க்க இதுவும் வேண்டும்

இந்தியா முழுவதும் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க ஆதார் அட்டை கட்டாயம் என்ற நடைமுறை படிப்படியாக கொண்டு வரப்பட்டு வருகிறது. இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கும் ஆதார் அட்டையை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக அரசு ஆதார் அட்டை மட்டுமின்றி குழந்தைகளை பள்ளியில் சேர்க்க இன்னொரு ஆவணமும் தேவை என்ற பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

ஆம், ஒவ்வொரு குழந்தைக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டிருந்தால் மட்டுமே அந்த குழந்தைகளை பள்ளியில்  சேர்க்க முடியும் என்ற ஆலோசனையை அரசும், அதிகாரிகளும் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நடைமுறை அமல்செய்யப்பட்டால் தமிழகத்தில் போலியோ, அம்மை, காசநோய் உள்ளிட்டவற்றை அடியோடு ஒழிக்கலாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.