வெள்ளி, 13 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 11 நவம்பர் 2023 (16:34 IST)

வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட 13% குறைவு

rain red umbrella
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக  வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி  பல இடங்களில் பெய்து வருகிறது.  தமிழ் நாட்டில் வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட 13% குறைவாகப் பெய்துள்ளதாகவும், அக்டோபர் 1 முதல் இன்று வரை 254 மி.மீ மழை பெய்ய வேண்டிய நிலையில் 220.0 மி மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்தது.

இந்த நிலையில், கிழக்கு திசை ககாற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக  வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி கன்னியாகுமரி,  நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, இராம நாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருது நகர் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.