1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 12 ஜனவரி 2023 (11:48 IST)

இன்றுடன் நிறைவு பெறுகிறது வடகிழக்கு பருவமழை.. இனி வெயில் தான்!

rain
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக வடகிழக்கு பருவமழை பெய்தது என்பதும் இதன் காரணமாக அனைத்து நீர் நிலைகளும் கிட்டத்தட்ட நிரப்பிவிட்டது என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் இன்றுடன் வடகிழக்கு பருவ மழை முடிவடைவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த டிசம்பர் 31ஆம் தேதி வடகிழக்கு பருவமழை முடிந்தாலும் அதன் தாக்கம் தென் மாவட்டங்களில் தொடர்ந்தது என்றும் இதனை அடுத்து தமிழகம் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இன்றுடன் பருவமழை விலகுவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இன்னும் சில நாட்களுக்கு தமிழக முழுவதும் வறண்ட வானிலையே இருக்கும் என்றும் அனைத்து மாவட்டங்களிலும் வெயில் படிப்படியாக அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran